வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப சிலர் ஹனுமான் சாலிசாவை (ஆஞ்சிநேயர் பாடல்) பாராயணம் செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
நேற்று (ஏப்ரல் 23), மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் பாலாசாஹேப் தோரட், ஒன்றிய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், எரிபொருள் விலையேற்றம் மற்றும் வேலையின்மையால் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார்.
“இந்தப் பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப சிலர் வேண்டுமென்றே முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு வெளியே ஹனுமன் சாலிசாவை பாடப் போவதாக அறிவித்து அரசியல் சர்ச்சையைத் தூண்டுகிறார்கள்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது என்றும் ஆனால் சிலர் ஹனுமான் சாலிசாவை வைத்து அரசியல் செய்து அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்றும் பாலாசாஹேப் தோரட் குறிப்பிட்டுள்ளார்.
Source: PTI
தனியார்மயத்தினால் கொழுக்கும் முதலாளிகள் |அதிர்ச்சியளிக்கும் Oxfam அறிக்கை
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.