மகாராஷ்டிராவில் அம்பேத்கர், பூலே குறித்து அவதூறாக பேசியதாக கூறி பாஜக அமைச்சர் சந்திரகாந்த் பாட்டில் மீது ‘கருப்பு மை’ வீசப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டில் நேற்று பூம்புரி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அதில் பேசிய சந்திரகாந்த், பள்ளி, கல்லூரிகளை தொடங்க அம்பேத்கர், ஜோதிராவ் பூலே அவர்களும் ஹுலி அரசின் அனுமதியை கேட்கவில்லை. அவர்கள் மக்களிடம் பிச்சை எடுத்து பள்ளி, கல்லூரிகளை தொடங்கினர்’ என்று கூறினார்.
அவரது பேச்சுக்கு சில தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்த அமைச்சர் சந்திரகாந்த் மீது கருப்பு மை வீசப்பட்டது. அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கருப்பு மை வீசப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Source : the print
Plight of Manual Scavengers I Director Deepak and Writer Muthuvel I Witness Movie I @SonyLIV
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.