தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை கேலி செய்ததாக பாஜக தலைவர் நுபுர் சர்மா மீது மகாராஷ்டிரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் தங்களது இறைத்தூதராக கருதும் நபிகள் நாயகம் அவர்களை இழிவுபடுத்தியதாக இவர்மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குஃப்ரான் கான் என்பவர் அளித்த புகாரின்படி பகைமையை ஊக்குவித்தல், மத உணர்வுகளைக் புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில், பங்கேற்று பேசிய நுபுர் சர்மா இஸ்லாமியர்களின் மத புத்தகங்களில் உள்ள சில விஷயங்களை பார்த்தால் மக்கள் கேலி செய்வார்கள். ஆனால் இஸ்லாமியர்களோ இந்து மதத்தை கேலி செய்கிறார்கள், மசூதி வளாகத்திற்குள் இருந்ததாக கூறப்படும் ‘சிவலிங்கத்தை’ அவர்கள் நீரூற்று போன்ற கல் என்று அழைக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம், ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, மும்பைக்கு அருகே ஒரு பேரணியில் கலந்து கொண்டபொழுது நுபுர் சர்மாவின் கருத்துகளுக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியிருந்தது நினைவு கூரத்தக்கது.
Source : India today
BJP கும்பலின் சாதி வெறி | Sangathamizhan Interview | Annamalai | Vanniyarasu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.