Aran Sei

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் மகா விகாஸ் அகாதி: மகாராஷ்ட்ராவில் பிரம்மாண்ட பேரணி

credits : the indian express

அகில இந்திய கிசான் சபையின் மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த விவசாயிகள் 1,200 க்கும் மேற்பட்டோர் 90 க்கும் மேற்பட்ட வாகனங்களில், நாசிக்கிலிருந்து மும்பை நோக்கிய வாகன அணிவகுப்பைத் தொடங்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் டெல்லியில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா விடுத்த அழைப்பின் பேரில் இந்த அணிவகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வாகன பேரணியில் பங்கேற்கும் விவசாயிகள் இன்று ஆசாத் மைதானத்தில் ஒன்றுகூடி மூன்று நாள் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கியுள்ளனர். ஜனவரி 25 ஆம் தேதி, ராஜ் பவனை நோக்கிய பிரம்மாண்டமான பேரணிக்கு திட்டமிட்டிருக்கும் விவசாயிகள், அந்தப் பேரணியில், விவசாய அமைப்புகள், இடது மற்றும் ஜனநாயக அமைப்புகள், மகாராஷ்ட்ரத்தை ஆளும் கூட்டணியான மகா விகாஸ் அகாதியைச் சேர்ந்த தலைவர்களான சரத் பவார், பாலாசாகிப் தொராட், ஆதித்யா தாக்கரே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் குடியரசு தின டிராக்டர் பேரணி : அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு

இந்தப் பேரணிக்குப் பின்னர் அவர்கள் மகாராஷ்ட்ரத்தின் ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்க இருக்கின்றனர். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி ஆசாத் மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள்: “நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நிறுத்திவைக்க அரசுக்கு அதிகாரம் இல்லை” – தோல்வியில் முடிந்த 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் போராடி வருவதற்கு  ஆதரவாக, இந்தப் பேரணிகள் நடைபெற இருப்பதாக அகில இந்திய விவசாயிகள் சபையின் தலைவர் அசோக் தவாலே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் டிராக்டர் அணிவகுப்பு – அரசுக்கு நிகராக பேரணி நடத்த விவசாயிகள் திட்டம்

“எங்களுடைய முக்கிய கோரிக்கை விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தும் சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

சட்டநீக்கம் அல்ல நிறுத்திவைப்பு தான்: ‘எங்கள் தலைக்கு மேல் கத்தியை தொங்கவிடும் மத்திய அரசு’ – விவசாயிகள் வேதனை

மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெறவும், நான்கு தொழிலாளர் குறியீடுகளை ரத்து செய்யவும், அனைத்து காடு, கோயில் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்றவற்றை விவசாயிகளின் பெயர்களில் வைக்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்றினால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள, விவசாயிகளுக்கான மகாத்மா பூலே கடன் தள்ளுபடி திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும் நாங்கள் முயல்கிறோம்” என்று அகில இந்திய விவசாயிகள் சபையின் தலைவர் அசோக் தவாலே கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் மகா விகாஸ் அகாதி: மகாராஷ்ட்ராவில் பிரம்மாண்ட பேரணி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்