மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 10% இடங்கள் உயர் வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலாஜி படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்ட 10% EWS! – தடுக்குமா ஸ்டாலின் ஆட்சி?
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் இதுவரை 69% இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. ஆனால் ம.கா பல்கலைக்கழகத்தில் MSc Bio Tec படிப்பான விண்ணப்பத்தில் EWS பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் விளக்கம் கேலிக்கூத்தானது. இந்த அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலை முட்டுக் கொடுப்பாரா? பாலியல் குற்றவாளியை தண்டிக்க போராடுவாரா? | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.