மேலூர் வாக்குபதிவு மையத்தில் இசுலாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற கோரி பாஜக பூத் ஏஜென்ட் அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி எட்டாவது வார்டு அல்-அமீன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் போது பாஜக பூத் ஏஜென்ட் இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்ற சொல்லி கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குபதிவு நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு அல்-அமீன் பள்ளியில் பாஜக ஏஜென்ட் ஆக செயல்படும் கிரிராஜன் வாக்களிக்க வந்த இசுலாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றக்கோரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து மற்ற கட்சியினர் வாக்குபதிவு மையத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து வந்த காவல்துறையினர் கிரிராஜனை வாக்கு பதிவு மையத்தை விட்டு அப்புறப்படுத்தியதால் பரபரப்பு குறைந்து மீண்டும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்கள் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.
வாக்காளர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்த கையடுத்து இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் அதிமுக திமுக வாக்கு சாவடி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பாஜக பிரமுகர் கிரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.