மதுரையில் உள்ள நேரு நகர்ப் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் பொழுது விஷவாயு தாக்கி சரவணன், சிவகுமார், லட்சுமணன் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இந்த மூவரது உடலும் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர்: துணியால் மறைக்கப்பட்ட குஜராத்தின் குடிசை பகுதிகள்
இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாநகராட்சியிடம் இருந்து கழிவு நீர் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான வி.ஆர்.ஜி நிறுவனத்தின் உரிமையாளர் விஜயானந்த் மற்றும் ஊழியர்களாக ரமேஷ், லோகநாதன் ஆகிய 3 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
உரிய உபகரணங்களின்றி வேலையில் ஈடுபடுத்தியது, கவனக்குறைவாகச் செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த 3 பெரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த 3 போரையும் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வேலை செய்ததால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆகவே மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளன.
Source :Puthiyathalaimurai
சீமானை இயக்குவது பார்ப்பனியம் தான்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.