Aran Sei

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு: பதவி விலகுவதாக பேரா. விபின் பிரதமருக்கு கடிதம்

சென்னை ஐஐடி நிர்வாகத்தால் என்மீது சாதியப்பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் அதனால் என் இணைப்பேராசிரியர் பதவியை விட்டு விலகுகிறேன் என்றும் பேராசிரியர் விபின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இன்று(பிப்பிரவரி 4), பிரதமர் மோடி மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு பேராசிரியர் விபின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,

நான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் (ஓபிசி) சேர்ந்தவன். கடந்த இரண்டு ஆண்டுகளாக, சென்னை ஐஐடியில் உள்ள பிராமண சமூகத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்களாலும் பெரும்பான்மையாக பிராமணர்களைக் கொண்ட நிர்வாகத்தாலும் நான் சாதிரீதியிலான பாகுபாட்டிற்கும் துன்புறுத்தலுக்கும் ஆளானேன்.

சாதிய ஒடுக்குமுறையும் சென்னை ஐஐடியும் – சாதிப் பாகுபாட்டை எதிர்த்து பதவி விலகிய பேராசிரியர் விபினோடு நேர்காணல்

இது குறித்து, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்தில் (என்சிபிசி) புகார் செய்திருந்தேன். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இப்புகாரை விசாரிக்க சென்னை ஐஐடிக்கு என்சிபிசி உத்தரவிட்டது. அக்டோபர் மாதம் விசாரணை முடிவடைந்ததிலிருந்து, சென்னை ஐஐடியின் அப்போதைய இயக்குநர் மற்றும் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவர் என்னை இடைவிடாது துன்புறுத்தினர்.

சென்னை ஐஐடியில் உள்ள சாதிவெறி மேலாதிக்கவாதிகளால்தான் நான் ராஜினாமா செய்ய நேர்கிறது. பிற்படுத்தப்பட்ட/பட்டியல் சமூகத்தினரைச் சேர்ந்த ஒருவரை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். கண்ணியத்துடன் பணியாற்ற விடவும் மாட்டார்கள். எனது புகாரை தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையம் வழியாகவே விசாரிக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் பணிக்காக நடைபெறும் எஸ்சி/எஸ்டி/ஓபிசி வகுப்பினருக்கான சிறப்பு ஆட்சேர்ப்பில் நடைபெறும் நாசவேலைகள் குறித்து ஒன்றிய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

பிராமணர் அல்லாதோரை இயக்குனராக நியமிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டியிலிருந்து பதவி விலகிய பேராசிரியர் குடியரசுத்தலைவருக்குக் கடிதம்

பின்வருவனவற்றில் பட்டியலிடப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், பிப்பிரவரி மாதம் 24ஆம் தேதி சென்னை ஐஐடியின் நிர்வாகக் கட்டிடத்தின் முன் ‘உண்ணாவிரத போராட்டத்தை’ தொடங்குவேன்.

  1. தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையமே என் புகாரை விசாரிக்க வேண்டும்.

(அ) ​​விசாரணை முடியும் வரை துறைத் தலைவர் பதவியில் இருந்து           திரு.ஜோதிர்மயா திரிபாதி விலகி இருக்க வேண்டும். மீண்டும் அவர் பதவியமர்த்தப்படும்போது ஒரு நிபந்தனையை பின்பற்ற வேண்டும். அதாவது, என்னுடமும் பிராமணர் அல்லாத பிற சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களுடன் அவர் நடந்துக்கொண்ட விதம் குறித்து ஆராய வேண்டும்.

(ஆ) விசாரணை முடியும் வரை சென்னை ஐஐடியின் கவர்னர்கள் குழுவிலிருந்து வி.ஆர்.முரளீதரன் விலகி இருக்க வேண்டும். மீண்டும் அவர் பதவியமர்த்தப்படும்போது ஒரு நிபந்தனையை பின்பற்ற வேண்டும். அதாவது, என்னுடமும் பிராமணர் அல்லாத பிற சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களுடன் அவர் நடந்துக்கொண்ட விதம் குறித்து ஆராய வேண்டும்.

‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’ – பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒன்றிய அரசிடம் கோரிக்கை

  1. தற்போது சென்னை ஐஐடியில் எஸ்.சி/எஸ்.டி/ஓபிசி வகுப்பினருக்கான பேராசிரியர் நியமனங்கள் சிதைக்கப்படுவது குறித்து ஒரு குழு அமைத்து ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும். நம்முடைய மண்ணில் இருந்து சாதி பாகுபாடு என்ற கொடுமையை ஒழிக்க நீங்கள் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழில்: அரவிந்ராஜ் ரமேஷ்

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு: பதவி விலகுவதாக பேரா. விபின் பிரதமருக்கு கடிதம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்