சென்னை உயர்நீதிமன்றம் பொதுநல மனுவொன்றை குப்பை என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
பாஸ்டேக் நடைமுறை சாமானியர்களும் அணுகும் வகையில் இருக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடைபாதையில் கடைகளை கொண்டுள்ள ஷாப்பிங் மால்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும், பொது நல மனு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம் என்றும் உயர்நீதி மன்ற அமர்வில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவின்மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்ற அமர்வு, “ஷாப்பிங் மால்களுக்கு உள்ளே உள்ள பகுதிகுறித்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது வியப்பாக இருக்கிறது. இது போன்ற குப்பைகளைக் குறைத்தாலே நீதிமன்றம் சிறப்பாகச் செயல்படும்” என்றும் குறிப்பிட்டுள்ளது.
`சென்னைப் பெரு வெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா?’ – உயர்நீதிமன்றம்
இந்நிலையில், மனுதாரருக்கு 100 ரூபாய் அபராதமும், ஒரு வருடத்திற்கு பொதுநல மனு தாக்கல் செய்யத் தடை விதித்தும் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
source; the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.