பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில், கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர், காவல்துறையால் தேடப்பட்டு வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி, போபாலில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷாதோல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றதகவும், அதன் பிறகு வீடு திரும்பாத அந்த பெண், இரண்டு நாட்கள் கழித்து (பிப்ரவரி 20) மயக்கமடைந்த நிலையில் வீட்டிற்கு அருகில் கிடந்ததாக, அந்தப் பெண்ணின் உறவினர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பெண், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும்நிலையிலில், அந்த பெண்ணின் குடும்பத்தினர், காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
உத்திர பிரதேசத்தின் வழியில் மத்திய பிரதேசம் : மத சுதந்திர சட்டம் நிறைவேற்றம்
அந்தப் புகாரில், கடைக்குச் சென்ற தங்கள் பெண்ணை ஜய்த்பூரின் பாஜக தலைவர் விஜய் திரிபாதி, அவரின் கூட்டாளிகள் ராஜேஷ் ஷுக்லா, முன்னா சிங், மோனு மகராஜ் ஆகியோர் காரில் கடத்திச் சென்றனர் என்றும், பண்ணை வீட்டில் அடைத்து வைத்து இரண்டு நாட்கள் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்
இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை அதிகாரி முகேஷ் வைத்யா, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் விஜய் திரிபாதி உட்பட, நான்கு பேர் மீது பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருவதாகவும் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.