யாகம் வளர்த்து, அதில் ஆகுதி (யாகத் தீயில் இடப்படும் நெய் உள்ளிட்ட பொருட்கள்) வழங்கி, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்றும் அதன் வழியாக, கொரோனா மூன்றாம் அலையை தடுப்போம் என்றும் மத்திய பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் கூறியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உஷா தாகூர், இப்பேரிடர் சூழலை சமாளிக்க யாகம் வளர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“யாகம் வளர்த்து, பிரசாதம் வழங்கி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்த அனைவருக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். ஏனென்றால், இதுபோன்ற தொற்றுநோய் சமயங்களில், அவற்றை அகற்ற இந்த புனிதமான சடங்கை செய்வது பல காலங்களாகவே ஒரு பாரம்பரியமாக நம் பண்பாட்டில் உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
மாட்டுச் சாணம் கொரோனாவை குணப்படுத்தாது; வேறு நோயைத்தான் உண்டாக்கும் – மருத்துவர்கள் தகவல்
மேலும், யாகம் என்பது சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்தும் ஒரு நடைமுறைதான் என்றும் இது மதவெறியோ அல்லது சடங்கோ அல்ல என்றும் உஷா தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆகவே, நாம் அனைவரும் இரண்டு முறையாவது யாகம் வளர்த்து, பிரசாதம் வழங்கி, நம் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவோம். கொரோனா மூன்றாவது அலை நம் நாட்டைத் தொட முடியாத படி செய்வோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.