ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி கொண்டாட்டத்தின்போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், அங்குப் போடப்பட்ட ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளது.
உள்ளூர் நிர்வாகம் இரண்டாவது நாளாக கர்கோனில் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளது.
ஆனால், இரவு ஊரடங்குச் சட்டம் தொடரும் என்றும், சனிக்கிழமை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டபோது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் கஷ்வானி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 10 ஆம் தேதி கர்கோன் நகரில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 64 முதல் தகவல் அறிக்கைககள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
கார்கோன் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் சவுத்ரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட மொஹ்சின் அக்கா வசீம், உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வீடுகளை விற்க முடிவு
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மற்ற குற்றவாளிகளை தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கார்கோன் மற்றும் பிற இடங்களில் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட காலத்தில், பால், காய்கறிகள், மருந்துகள் விற்கும் கடைகள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் உள்ளிட்டவை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மத வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Source: newindianexpress
Dalit Youth Vignesh Issue | மிச்சமிருக்கும் இன்னொரு உயிரையேனும் கப்பாற்றுங்கள்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.