Aran Sei

மத்தியப் பிரதேசம்: அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்களான பகவத்கீதை, வேதங்கள் கற்பிக்கப்படும் – முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

த்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்களான பகவத் கீதை, ராமசரிதமானஸ் மற்றும் வேதங்கள் ஆகியவை கற்பிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், உபநிடதங்கள், பகவத்கீதை என எதுவாக இருந்தாலும், அவை நமது விலைமதிப்பற்ற புத்தகங்கள். இந்த நூல்கள் ஒரு மனிதனை ஒழுக்கமாகவும், முழுமையானதாகவும் மாற்றும் திறன் கொண்டவை.

முதலமைச்சராக நான் சொல்கிறேன், நம்முடைய மத புத்தகங்களை அரசுப் பள்ளிகளில் கற்பிப்போம். பகவத்கீதை, ராமாயணம், ராமசரிதமானஸ், மகாபாரதத்தின் சாராம்சம் ஆகியவற்றை கற்பிப்போம். மற்ற பாடங்களுடன், இந்த மத புத்தகங்களும் அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும்.

டிசம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் – கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் அறிவிப்பு

ராமரை ஏன் கற்பிக்கக்கூடாது? துளசிதாஸ் இவ்வளவு பெரிய புத்தகத்தை (ராமசரிதமானஸ்) எழுதியுள்ளார். இத்தகைய புத்தகம் எங்கே கிடைக்கும்? நம்முடைய பெரிய மனிதர்களை அவமதிக்கும் இதுபோன்றவர்களை பொறுத்துக்கொள்ள முடியாது. மத்திய பிரதேசத்தில் நமது புனித நூல்களை கற்பிப்பதன் மூலம், நமது குழந்தைகளின் ஒழுக்கத்தை முழுமையாக்குவோம்.

நமது ஒவ்வொரு மூச்சிலும் ராமர் இருக்கிறார். ராமர் இல்லாமல் இந்த நாடு ஒன்றுமில்லை. ராமர் நம் இருப்பு. ராமர் நம் உயிர், ராமர் நம் கடவுள், ராமர்தான் இந்தியாவுக்கு அடையாளம் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் என்று முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

Source : india today

Bjp new social media rule to empower PIB to remove the news | Maridas | Rangaraj Pandey

மத்தியப் பிரதேசம்: அரசுப் பள்ளிகளில் இந்து மத நூல்களான பகவத்கீதை, வேதங்கள் கற்பிக்கப்படும் – முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்