Aran Sei

மத்திய பிரதேசம்: வலதுசாரிகளின் போராட்டத்திற்கு பிறகு ஹிஜாபுக்கு தடை வித்த அரசு கல்லூரி

த்திய பிரதேசத்தின் ததியா மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி முதுகலை அரசுக் கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை வலதுசாரி அமைப்பினர் எதிர்த்ததை அடுத்து, கல்லூரிக்குள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹிஜாப் அணிந்த 2 மாணவிகள் கல்லூரிக்குள் நுழைந்த பிறகு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ என்று சிலர் முழக்கமிடும் காணொளியை ட்விட்டரில் நாம் காணலாம்

இந்த சம்பவத்திற்கு பிறகு “இந்தக் கல்லூரிக்குள் ஹிஜாப் உட்பட மதரீதியான எந்த ஆடையையும் யாரும் அணிந்து வர கூடாது” என்று கல்லூரி முதல்வர் ராகுல் தெரிவித்துள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், துர்கா வாஹினி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடைய இளைஞர்கள் இந்த கல்லூரிக்கு வந்த பிறகுதான் இந்த சம்பவம் நடந்ததாகவும், ஹிஜாப் அணிந்த 2 மாணவிகளைக் கண்டதும் காவி வலதுசாரி அமைப்பினர் கல்லூரிக்குள் போராட்டம் நடத்தியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Source : The Wire

மத்திய பிரதேசம்: வலதுசாரிகளின் போராட்டத்திற்கு பிறகு ஹிஜாபுக்கு தடை வித்த அரசு கல்லூரி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்