மத்திய பிரதேச மாநிலத் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கலாமா? என்று கேள்வித் தயாரித்த இருவர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஜூன் 19 ஆம் தேதி மத்தியபிரதேச மாநில சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இதில், காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா?’ என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
இந்த கேள்விக்கு இரண்டு வாதங்கள் அளிக்கப்பட்டதுடன், அதற்கு 4 ஆப்ஷன்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தன.
”கேள்வி: ’காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கும் முடிவை இந்தியா எடுக்க வேண்டுமா?’
வாதம் 1: ஆம், இந்தியாவின் பணத்தை சேமிக்கும்
வாதம் 2: இல்லை. இதுபோன்ற முடிவு மேற்கொண்டு இதுபோன்ற கோரிக்கைகள் அதிகரிக்கச் செய்யும்
பதிலுக்கான நான்கு ஆப்ஷன்கள்:
A. வாதம் 1 வலிமையானது
B. வாதம் 2 வலிமையானது
C. இரண்டு வாதங்களும் வலிமையானது
D. இரண்டு வாதங்களும் வலிமையற்றது”
கேள்வித்தாள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேள்வித்தாளைத் தயாரித்த இரண்டு நிபுணர்களை பிளாக் லிஸ்டில் வைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Source: Puthiyathalaimurai
பாஜக ஆப்ரேஷன் தமிழ்நாட்டில் நடக்காது | Maharashtra political crisis | Surya Xavier
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.