Aran Sei

‘15 லட்சம் என்றால் மட்டும் புகார் செய்யுங்கள்’ – ஊழல் புகார் செய்ய புதிய வரையறை கொடுத்த பாஜக அமைச்சர்

15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே என்னை அணுக வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா பேசியுள்ளதாக காட்டும் காணொளி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ள அக்காணொளியில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா, “கிராமத்தலைவர்கள் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டும்போது, ​​​​15 லட்சம் ரூபாய்க்கு கீழ் ஊழல் செய்திருந்தால் என்னிடம் வராதீர்கள் என்று நான் விளையாட்டாக மக்களிடம் சொல்வேன். 15 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டும் என்னிடம் வாருங்கள்” என்று கூறியுள்ளார்.

‘தற்போதைய பிரச்சினைகளை கையாள்வதில் ஊடகங்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடைபெற்றுள்ள கருத்தரங்கத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ள ஜனார்தன் மிஸ்ரா, “கிராமத்தலைவர்கள் ஊழல்கள் செய்வதாக குற்றஞ்சாட்டி, பலர் என்னிடம் வருகின்றனர். ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முதலில் ரூ. 7 லட்சம் செலவு செய்ய வேண்டும். அடுத்த தேர்தலுக்கு ரூ. 7 லட்சத்தை செலவு செய்ய வேண்டும். உயர்ந்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு ரூ. 1 லட்சத்தை செலவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச கான்பூர் மாவட்ட நீதிமன்றத்தால் வரி ஏய்ப்பு வழக்கில் வாசனை திரவிய வணிகர் பியூஷ் ஜெயின் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட மறுநாள் ஜனார்தன் மிஸ்ரா இக்கருத்துக்களைக் கூறியுள்ளார். பியூஷ் ஜெயின் கைது ஆளும் பாஜகவிற்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது. இருகட்சியினரும் பியூஷ் ஜெயின் உடன் தொடர்பில் இருப்பதாக இருகட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

Source: The Indian Express

‘15 லட்சம் என்றால் மட்டும் புகார் செய்யுங்கள்’ – ஊழல் புகார் செய்ய புதிய வரையறை கொடுத்த பாஜக அமைச்சர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்