Aran Sei

இந்திய தேசியக் கொடியில் இருந்த ‘மேட் இன் சைனா’ டேக் – காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் சர்ச்சை

கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் ‘Made in China’ என்ற டேக் இருந்துள்ளது.

உலக நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் தேசியக் கொடியை சீனாவில் தயாரித்து வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65 ஆவது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டின், மாநிலங்களின் சபாநாயகர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இம்மாநாட்டில் இந்தியா சார்பில் பயன்படுத்தப்பட்ட தேசியக் கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்த்து..

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

இந்த மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதியாக தமிழக சபாநாயகர் அப்பாவு இடம்பெற்றிருந்தார். அதேபோல் இந்தியா சார்பில் நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17 ஆண்டுகளில் தேசிய கட்சிகளுக்கு அறியப்படாத ஆதாரங்களிலிருந்து ரூ.15,077 கோடி நன்கொடை கிடைத்துள்ளது – ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்

இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு கனடாவிலிருந்து தொலைபேசியில், பேசிய தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு ”இந்தியாவின் பெருமை வெளிப்படுத்துவதற்காக பேரணியாக தேசியக் கொடிகளை ஏந்திக்கொண்டு சென்றோம். அந்த கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என இருந்தது, இதைக் கண்டு பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்திய கொடியை பிடிக்கிறோம் அதில் ‘மேட் இன் சைனா’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது என்று சொன்னவுடனே அவர் சிரித்துக் கொண்டார். அவ்வளவுதான். ஆனால் எல்லோருக்கும் கஷ்டம் இருந்தது. சைனாவில் இருந்து தேசியக் கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய பிரஸ்கள் இருக்கிறது இரவு சொன்னால் காலையில் 100 கோடி கொடிகளை கூட தர முடியும். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை” என்றார்.

ஏற்கனவே தேசியக் கொடிகள் தயாரிப்பது மற்றும் அதை ஏற்றுவதற்கான நெறிமுறைகளிலிருந்து பாஜக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.

kallakurichi Sakthi School Ravi and Shanthi released | 2nd post mortem raise doubt | Dr Pugazhendhi

இந்திய தேசியக் கொடியில் இருந்த ‘மேட் இன் சைனா’ டேக் – காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் சர்ச்சை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்