உத்தரகண்ட் அரசுப் பள்ளியில் பட்டியல் சமூககத்தைச் சேர்ந்த சமையல்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டு, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சமையல்காரர் சமைத்த உணவைத் பட்டியல் சமூக மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், பட்டியல் சமூககத்தைச் சேர்ந்த சமையல்காரர் பணிநீக்கம் செய்யப்பட்டு, பிறகு பணியமர்த்தப்பட்ட ஆதிக்கச் சாதிப் பெண் சமையல்காரர் சமைத்த மதிய உணவைத் பட்டியல் சமூக மாணவர்கள் சாப்பிட மறுத்துவிட்டனர்.
இந்த அரசுப் பள்ளியில் 6 – 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 43 மாணவர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்த சமையல்காரர் சுனிதா தேவி சமைத்த மதிய உணவைச் சாப்பிட மறுத்துள்ளனர். அதனால் சுனிதா தேவி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதற்குப் பழிவாங்கும் விதமாக, ஆதிக்க சாதிப் பெண் சமையல்காரர் சமைத்த மதிய உணவை, பள்ளியின் 23 தலித் மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர்.
சாதியின் காரணத்திற்க்காக சுனிதா தேவி பணிநீக்கம் செய்யப்படவில்லை. மாறாக அவரது பணி நியமனத்தில் உள்ள நடைமுறைக் குறைபாடுகளால் தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று சம்பாவத் மாவட்டத்தின் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, ஒரு வாரத்தில் இது பற்றிய அறிக்கை வெளிவரும் என எதிர்பார்க்கிறோம் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தோமர் கூறியுள்ளார்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சமையல்காரர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிகழ்வு உத்தரகண்ட் மாநிலத்தில் தலைப்புச் செய்தியாக மாறிய பிறகு, பெண்ணின் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுக்கக் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் தம்தா கூறியுள்ளார்.
ஹரியானாவில் இயேசு சிலையை உடைத்த இந்துத்துவாவினர் – காவல்துறை வழக்குப் பதிவு
இந்த பிரச்சினையை ஒட்டி இரு சமூகத்தினருக்கும் இடையே பேசி தீர்வு காணப்பட்டதாக சம்பாவத் மாவட்ட நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) தெரிவித்துள்ளது.
“இன்றிலிருந்து (27.12.2021) ஆதிக்கச் சாதி சமையல்காரர் சமைத்த உணவைத் தலித் மாணவர்கள் சாப்பிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று சம்பாவத் மாவட்ட நீதிபதி வினீத் தோமர் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.