உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஜொமோட்டோ ஊழியர் தலித் என்பதற்காக அவரை தாக்கி, முகத்தில் துப்பிய இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஒரு தலித்தின் கைகளில் இருந்து உணவைப் பெற மாட்டோம் என ஆர்டரை மறுத்த வாடிக்கையாளர்கள், அவரை சாதிரீதியாக இழிவு செய்துள்ளனர்.
அந்த ஊழியர் உத்தரபிரதேசத்தில் தலித் என்று வகைப்படுத்தப்பட்ட பாசி சமூகத்தைச் சேர்ந்தவர் என கூறியுள்ளார்.
தொற்று நோய் காலத்தில் அநீதியாக நடத்தப்படும் முறைசாரா தொழிலாளர்கள் – சிவராமன்
இந்த சம்பவம் ஜூன் 18 தேதி, ஆசியானா பகுதியில் வினீத் குமார் ராவத் என்ற ஜொமாட்டோ ஊழியர் உணவு விநியோகம் செய்ய சென்ற போது நடைபெற்றது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக ராவத் அளித்துள்ள புகாரில், ”அஜய் சிங்கின் சகோதரர் அபய் சிங் கதவைத் திறந்தார். நான் ஒரு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்ததும், என்னை சாதிரீதியாக இழிவுபடுத்த தொடங்கினார்.”என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உணவைப் பெற விரும்பவில்லை என்றால் ரத்து செய்யுங்கள் என்று கூறியதை ஏற்க அஜய் சிங் மறுத்துவிட்டார். அவர் என் முகத்தில் புகையிலை எச்சிலை துப்பியதோடு, என்னை சாதிரீதியாக இழிவு செய்வதை தொடர்ந்தார். விரைவில் அவரது வீட்டில் இருந்து வந்த அடையாளம் தெரியாத 10 முதல் 12 பேர் என்னைத் தாக்கத் தொடங்கினர்” என்று ராவத் கூறியுள்ளார்.
”முதலில் அவர்கள் குச்சியால் என் தலையில் தாக்கினர். ஆனால் நான் ஹெல்மட் அணிந்திருந்ததால், தலையில் காயம் ஏற்படவில்லை. அவர்கள் கொடுரமாக தாக்கியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தாக்கியபிறகு எனது இரு சக்கர வாகனத்தைப் பறித்துக் கொண்டனர்.” என்று ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
சொமோட்டோ, ஸ்விகி செயலிகள் நடுநிலையாக செயல்படுகிறதா? – விசாரணை நடத்த இந்திய போட்டி ஆணையம் முடிவு
இது தொடர்பாக அஜய் சிங் மற்றும அவரது பணியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆஷியானா காவல்நிலைய அதிகாரி தீபக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், அடையாளம் தெரியாத 12 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
ஜொமாட்டோ ஊழியர் அவமானப்படுத்தப்படுவது இது முதல்முறையல்ல. ஜூலை 30, 2019 தேதி, மத்தியபிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்த ஜொமாட்டோ வாடிக்கையாளர் அமித் சுக்லா ட்விட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். அதில், உணவு விநியோகிக்க வந்தவர் இந்து அல்லாதவர் என்பதால், ஆர்டரை கேன்சல் செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். மேலும், ஊழியரை மாற்றக் கூறியதோடு, அவரது பணத்தை திரும்பத் தருமாறும் கோரியிருந்தார்.
Source: PTI
அடிமைகளின் சண்டையைத் தொண்டர்கள் முறியடிப்பார்கள் | ADMK latest News | KC Palanisamy Interview | BJP
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.