டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை. என் மனைவி எனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை அவர் எனக்கு எழுதியுள்ளார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டல் அடித்துள்ளார்.
மகாத்மா காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அக்டோபர் 2 ம் தேதி ராஜ்காட் மற்றும் விஜய் காட் பகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இரண்டு இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை குறித்து துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது குடியரசு தலைவரை அவமதிக்கும் செயல் என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 2 ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் இருந்ததாகவும் அதற்கு முன் தினம் குஜராத்தில் பிரதமர் கலந்து பொதுக்கூட்டத்திற்கு காலியான இருக்கைகள் இடம்பெற்றிருந்த நிலையில், கெஜ்ரிவால் கூட்டத்திற்கு மக்கள் திரளாக கலந்து கொண்டதே சக்சேனாவின் இந்த கடிதத்திற்கு காரணம் என்று டெல்லி ஆம் ஆத்மி கூறிவருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை. என் மனைவி எனக்கு எழுதிய காதல் கடிதங்களை விட அதிக கடிதங்களை அவர் எனக்கு எழுதியுள்ளார். நீங்கள் கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள். அதுபோல் உங்களை இயக்குபவர்களையும் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.
Source : hindustantimes
Vetrimaaran Politics is Anti BJP RSS Politics | Arun Mo | Pure Cinema | Vetrimaaran Raja Raja cholan
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.