மதமாற்ற தடுப்புச் சட்டத்துக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி உத்தர பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்துப் பெண்களைப் பாதுகாக்க, லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றப்படும்.” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார். இதுதொடர்பாக அவசரச் சட்டத்தை உருவாக்க அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இஸ்லாமிய இளைஞர்கள், இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள்.
மதமாற்ற தடைச் சட்டத்தால் 17 வயது சிறுவன் கைது: அரசியலமைப்பை மீறுகிறதா உத்தர பிரதேசம்?
யோகியின் உத்தரவுப்படி, மாநில சட்ட கமிஷன் புதிய மசோதாவைத் தயாரித்து அரசுக்கு அனுப்பியது. இதன் அடிப்படையில் திருமணத்திற்காகக் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையிலான, அவசரச் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் நவம்பர் 27 அன்று ஒப்புதல் அளித்திருந்தார்.
மதமாற்ற தடைச் சட்டம்: மத்திய பிரதேசத்தில் பதியப்பட்ட முதல் வழக்கு
இந்தச் சட்டத்தின் படி, மதம் மாறி திருமணம் செய்துகொள்ள விரும்புவோர், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரிடம் 60 நாட்கள் முன்பே தகவல் அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, அவரின் அனுமதி கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்ளலாம்.
‘உங்களுக்கு எத்தனை முறை சொல்வது?’ – மதமாற்ற விவகாரத்தில் உ.பி., அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்
அதை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, ஆறு மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதுபோன்று நடத்தப்படும் திருமணம் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது: ‘இஸ்லாமியர் என்பதால் பலிகடா ஆனேன்’ – நதீம்
இந்தச் சட்டத்தினால், கலப்பு திருமணம் செய்த தம்பதிகள் பலர் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், இந்தச் சட்டத்திற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதமாற்ற தடுப்புச் சட்டத்தை ரத்து செய் : நூறு முன்னாள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம்
கலப்பு திருமணம் செய்த 200 தம்பதிகளுக்கு ஆதரவாக அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவுகளை வழங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் 125 தம்பதியருக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
‘எனது வாழ்க்கையை அரசு பாழாக்கி விட்டது’ – மதமாற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் வேதனை
இந்நிலையில் உத்தர பிரதேச அரசு , சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி மனு தாக்கல் செய்துள்ளது.
உபி மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் குற்றச்சாட்டு
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்த வழக்குகளை விசாரிக்கும் போது, எங்களால் அதில் தலையிட முடியாது” என கூறி உத்தர பிரதேச அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.