Aran Sei

லிவ் இன் உறவு, தன்பாலின உறவு ஆகியவையும் குடும்ப அமைப்புதான் – உச்ச நீதிமன்றம்

திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் உறவில் இருப்பவர்கள், தன்பாலின உறவு உறவாளர்கள் இவர்களும் குடும்ப அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒரு பெண் தனக்கு மகப்பேறு விடுப்பு மறுக்கப்பட்டது தொடர்பாக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், அந்த பெண்ணின் கணவருக்கு ஏற்கனவே முதல் மனைவி மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. முதல் மனைவி இறந்த நிலையில், மனுதாரர் அவரது இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் கர்ப்பமான நிலையில், இந்த மகப்பேறுக்கு தனக்கு விடுப்பு வேண்டும் என வேலை செய்யும் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவில் நீட் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருக்கிறார்களே தவிர மருத்துவர்கள் இல்லை – பேராசிரியர் கபீர் சர்தானா

ஆனால், முதல் கணவனுக்கு ஏற்கனவே முதல் மனைவி மூலம் குழந்தை பிறந்ததை காரணம் காட்டி மகப்பேறு விடுப்பு வழங்க நிறுவனம் மறுத்துவிட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், போப்பண்ணா அடங்கிய அமர்வு, குடும்பம் என்பது இந்திய சட்டப்படி, இந்த சமூக அமைப்பின் படி தாய், தந்தை,குழந்தைகள் ஆகியோரைக் கொண்ட மாறாத அமைப்பாக கொள்ளப்படுகிறது. சூழல்கள் காரணமாக ஒரு தனிநபரின் குடும்ப அமைப்பில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு அங்கீகாரம் சில வேளைகளில் மறுக்கப்படுகிறது.

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு – கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

எனவே, குடும்ப உறவு என்பதை ஒற்றை பெற்றோர், திருமணம் செய்யாமல் லிவ் இன் ஆக வாழ்தல், தன் பாலின உறவு என அனைத்து விதத்தையும் சேர்த்து அங்கீகரிக்கப்பட வேண்டும். இவர்களும் குடும்ப அமைப்பு தான். எனவே, இவர்களும் சட்டப் பாதுகாப்புக்கு உரித்தானவர்கள் என உச்சநீதிமன்றம் கருத்து  தெரிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பும் அதன் தொடர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Surya Xavier busting the RSS Savarkar Myth | Savarkar History | Savarkar on Bird | Karnataka | BJP

லிவ் இன் உறவு, தன்பாலின உறவு ஆகியவையும் குடும்ப அமைப்புதான் – உச்ச நீதிமன்றம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்