Aran Sei

வேளாண் சட்டங்களைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவார்: ராகுல் காந்தி

விவசாயிகளின் தொடர்ச்சியான போராட்டங்களைத் தொடர்ந்து வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டியிருந்ததைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்தில் ஒன்றிய அரசு இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டபோது விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி 2-வது முறையாக நாட்டின் இளைஞர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டம்: சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் 10% இட ஒதுக்கீடு, அதிகபட்ச வயது வரம்பு 23 ஆக உயர்வு – ஒன்றிய அரசு அறிவிப்பு

“கருப்பு வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திரும்பப் பெற வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதேபோல், அவர் நாட்டின் இளைஞர்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும்” என்று அவர் இந்தியில் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

“வேலையில்லாத இளைஞர்களின் வலி மற்றும் விரக்தியை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, ஆட்சேர்ப்பு, பதவி மற்றும் ஓய்வூதியம் குறித்த விருப்பமுள்ளவர்களின் நம்பிக்கைகளை அது பறிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா குற்றம் சாட்டியுள்ளார்.

Source : india today

ராணுவ ஆட்சிக்கான அடித்தளம் தான் Agnipath | Dr Kantharaj

வேளாண் சட்டங்களைப் போலவே, அக்னிபத் திட்டத்தையும் பிரதமர் மோடி திரும்பப் பெறுவார்: ராகுல் காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்