Aran Sei

விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்: ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?

ந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) பங்குகள் விற்பனை மே 4 ஆம் தேதி தொடங்கவுள்ளது. எல்.ஐ.சியின் ஒரு பங்கின் விலை 902 முதல் 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஐசி பங்கின் விற்பனையில், அதில் பாலிசி எடுத்துள்ள நபர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு ரூ.45 தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை மே 4 இல் தொடங்குகிறது: ரூ.21 ஆயிரம் கோடி கிடைக்கும் என ஒன்றிய அரசு தகவல்

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் 3.5 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதன் மூலம் ரூ. 21 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. எல்.ஐ.சியின் மொத்த மதிப்பு 6 லட்சம் கோடியாகும்

கடந்த பிப்ரவரியில் 5 விழுக்காடு பங்குகளை (ரூ 31.6 கோடி பங்குகள்) விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிருந்தது. இதற்காக இந்தியப் பங்குச் சந்தை பரிவர்த்தனை ஆணையமான செபியிடம் வரைவு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தனியார் மயமாகிறதா எல்ஐசி? – நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க பரிசீலிக்கும் ஒன்றிய அரசு

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பங்குச் சந்தையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையினால், எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை தடைப்பட்டது. இதனால் கடந்த வாரம், பங்குகள் விற்பனையின் அளவை 5 விழுக்காட்டிலிருந்து 3.5 விழுக்காடாக குறைத்து விற்க ஒன்றிய அரசு முடிவு செய்தது.

Source : The Hindu

அரசாணைக்கு பிறகும் தனியார் கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம்? | போராட்டத்தில் மாணவர்கள்

விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்: ஒரு பங்கின் விலை எவ்வளவு தெரியுமா?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்