ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற முடியும் என இங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது என்பதால் மக்களை முட்டாளாக்க விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் கூறியிருந்தார்.
புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படாது என்று எனக்கு நன்கு தெரியும் இந்த விவகாரத்தில் பொய் கூறி மக்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லை என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்திருந்தார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் குலாம் நபி ஆசாத் இன்னும் 10 நாட்களில் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறியுள்ளார்.
உ.பி: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சமூக சிறுமி – குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் கைது
இந்த நிலையில், குலாம் நபி ஆசாத்தின் கருத்து பற்றி ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெற முடியும் என இங்குள்ளவர்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் எழுப்பி அவர்களைத் தடுத்து நிறுத்தியது. அதேபோல், சட்டப்பிரிவு 370 மீண்டும் அமல்படுத்தப்படும். இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்பும் குரல்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ளன என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் நடைபயணம் வெற்றி | பயத்தில் உளறும் அமித்ஷா | Trichy Velusamy Interview | Amit shah | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.