Aran Sei

சுகாதாரத் துறைக்கு நிதி குறைப்பு – மாநிலங்களை பொறுப்பேற்க கூறிய ஒன்றிய அரசின் நிதி செயலர்

சுகாதாரத் துறை என்பது முதன்மையாக மாநிலங்களின் பொறுப்பு என்று ஒன்றிய அரசின் நிதிச் செயலர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழில்துறை பிரதிநிதிகள் மும்பையில் நடத்திய பேசிய இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் டி.வி.நரேந்திரன், கடந்த காலத்தை விட சுகாதாரத்திற்கான செலவென்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.3% ஆக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் ஒன்றிய அரசு 3 சதவீதத்திற்கும் மேல் செலவிட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது

உ.பி.,யில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் – விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கொரோனா தொற்றுநோய் குறையாத நேரத்தில், அறிவிக்கப்பட்ட 2022-2023 பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு 83,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டும் கிட்டத்தட்ட இதே தொகைதான் ஒதுக்கப்பட்டது.

“இந்தப் புள்ளிவிவரங்களைச் சுகாதாரத் துறை என்பது முதன்மையாக ஒரு மாநில அரசின் பொறுப்பு என்ற பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும்” என்று நிதிச் செயலர் டி.வி.சோமநாதன் தெரிவித்துள்ளார்..

மனிதநேயத்தை சாதி, மதம், பாலின அடிப்படையில் பிரிக்க முடியாது – குடியரசுத் தலைவர்

சுகாதாரத்துறைக்கு அரசு மட்டுமின்றி தனியார்த் துறையினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Source : The Hindu

சுகாதாரத் துறைக்கு நிதி குறைப்பு – மாநிலங்களை பொறுப்பேற்க கூறிய ஒன்றிய அரசின் நிதி செயலர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்