Aran Sei

விசாரணை தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் – தீஷா ரவி வழக்கு தாக்கல்

‘டூல்கிட்’ வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சூழலியல் செயல்பாட்டாளர் தீஷா ரவி, இந்த வழக்கின் விசாரணை விபரங்களை ஊடகங்களுக்கு டெல்லி காவல்துறை வழங்குவதற்கு தடை கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக, தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

”நியாயமான விசாரணை உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திர உரிமைகளை” மீறும் விதமாக, தீஷா ரவியின் வாட்சப் உரையாடல்களை, செய்தி ஊடகங்கள் வெளியிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 4 ஆம் தேதி பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பெங்களூருவில் கைது செய்யப்பட்ட தீஷா ரவியை, அரசியல் சாசன உரிமைகளை மீறும் விதமாக, அனுமதியின்றி அவர் ஒரே இரவில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என, தி இந்து குறிப்பிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் உன்னாவில் மீண்டும் பயங்கரம் – 2 தலித் சிறுமிகள் சடலமாக மீட்பு; ஒருவர் கவலைக்கிடம்

”காவல்துறையின் விசாரணை மற்றும் ஊடகத்தின் செய்திகளால், தீஷா ரவி மிகவும் வேதனையடந்திருக்கிறார். கசிந்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், டெல்லி காவல்துறை மற்றும் குறிப்பிட்ட சில ஊடக நிறுவனங்களின் தாக்குதலுக்குத் தீஷா ரவி உள்ளாகியுள்ளார்…” என அந்த மனுவில் கூறியிருப்பதாக தி இந்து தெரிவித்துள்ளது.

தீஷா ரவியிடமிருந்து அவரது செல்போன் மற்றும் லேப்டாப்பை பிப்ரவரி 13, 2021 ஆம் தேதி காலை 11 மணிக்குக் காவல்துறை கைப்பற்றியதையடுத்து, அதை தீஷாவால் பயன்படுத்த முடியவில்லை என்றும், ”அதில் இருக்கும் தீஷாவின் தனிப்பட்ட உரையாடல் தொடர்பான தகவல்களை அணுகும் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, அதை வெளியிடும்பட்சத்தில் அது அறிவாற்றல் குற்றமாகும்” என மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“அடுத்த முறை தாக்கும்போது தவறு நடக்காது” – மலாலா யூசுப்பிற்கு மீண்டும் தாலிபன்கள் கொலை மிரட்டல்

தீஷாவின் தனிப்பட்ட உரையாடல்களை ஊடக நிறுவனங்கள் வெளியிடுவது, கேபிள் தொலைக்காட்சிகள் வலைபின்னல் (ஒழுங்குமுறை) சட்டம், 1995 (சி.டி.என் சட்டம்) கூறியிருக்கும் வழிகாட்டுதல்களை மீறும் செயல் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் தீட்டியது, காலிஸ்தான் இயக்கத்துடனான தொடர்பு ஆகியவை குறித்து தீஷா ரவியை விசாரிக்க, டெல்லி காவல்துறை அனுமதி கோரியதை அடுத்து, அவருக்கு ஐந்து நாள் போலீஸ் காவல் வழங்கி, பிப்ரவரி 14 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணை தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் – தீஷா ரவி வழக்கு தாக்கல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்