Aran Sei

கடவுள்களால் தான் இந்தியா ‘உலகளாவிய அதிகார மையமாக மாறி இருக்கிறது’ – ஆர்.ஜே.டியின் தலைவருக்கு உ.பி அமைச்சர் பதில்

Credit: The Telegraph India

டவுள்களால் இந்தியா ஓர் “உலகளாவிய அதிகார மையமாக” மாறி இருக்கிறது என்று உத்தர பிரதேச பாஜக அமைச்சர் லக்ஷ்மி நாராயண சௌத்ரி தெரிவித்துள்ளார்.

நவீன இந்தியாவில் கியான்வாபி மசூதி போன்ற சர்ச்சைகளை எழுப்புவதற்கு சட்டம் அனுமதிக்க கூடாது என்று ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சௌத்ரி கூறியிருந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

எந்தவொரு அரசாங்கமோ, சமூகமோ அல்லது அமைப்போ இந்த கடவுள்களுடன் தொடர்புடைய இடங்களை அழக்காக்க விரும்பினால், யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது என்று பாஜக அமைச்சர் லக்ஷ்மி நாராயண சௌத்ரி குறிப்பிட்டுள்ளார்.

‘பறையனிலிருந்து விஷ்வகுருவாக’ – பாஜக அண்ணாமலைக்கு வன்னியரசு கண்டனம்

ராமர் பிறந்த இடம் அயோத்தி, கிருஷ்ணன் பிறந்த இடம் மதுரா, காசி (வாரணாசி) சிவபெருமானால் உருவாக்கப்பட்டது. இந்தக் கடவுள்களால்தான் இந்தியாவுக்கு அடையாளம் கிடைத்தது. அவர்களால்தான் இந்தியா ஒரு தேசமாக, உலகளாவிய அதிகார மையமாக மாறியுள்ளது என்று லக்ஷ்மி நாராயண் சவுத்ரி கூறியுள்ளார்.

“இன்று, பகவான் கிருஷ்ணர் அர்ஜுனுக்கு கற்பித்த பாடத்தை உலகமே கீதையாக வாசிக்கிறது. ஒரு சிறந்த மகனாக, சிறந்த கணவனாக, சிறந்த சகோதரனாக மற்றும் சிறந்த நண்பனாக எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய செய்தியை முழு உலகமும் ராமரிடமிருந்து பெற்றுள்ளது.

800-850 ஆண்டுகளாக சிதைக்கப்பட்ட இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாக்க இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

உ.பி: ராமர் கோயில் வெற்றியைத் தொடர்ந்தே காசி, மதுரா கோயில் கோரிக்கைகள் எழுந்துள்ளன – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

வாரணாசியில் நடைபெற்று வரும் ஞானவாபி மசூதி வழக்கு மற்றும் மதுராவின் ஷாஹி ஈத்கா வழக்குகுறித்து கருத்து தெரிவிக்க லக்‌ஷமி நாராயணன் சவுத்ரி மறுத்துவிட்டார்.

“ஒரு விஷயத்தை நான் திட்டவட்டமாகச் சொல்ல முடியும், மற்ற இடங்கள் ஆய்வு செய்யப்படலாம், ஆனால் மதுராவைப் பொறுத்தவரை, எந்த ஆய்வும் தேவை இல்லை,” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, ஞானவாபி மசூதியில் நடப்பது போன்ற விவாதங்கள் நவீன ஜனநாயக இந்தியாவில் நடக்க கூடாது என்று ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சௌத்ரி தெரிவித்திருந்தார்.

“இது போன்ற விவாதங்களை சட்டம் இனி அனுமதிக்காது. நவீன ஜனநாயக இந்தியாவில் இந்த விவாதங்களை நாம் நடத்தக் கூடாது,” என்றும் ஜெயந்த் சௌத்ரி  கூறியிருந்தார்.

Source: Theindianexpress

Teleprompter இல்லன்னா மோடியால பேச முடியுமா? | Surya Siva Interview

கடவுள்களால் தான் இந்தியா ‘உலகளாவிய அதிகார மையமாக மாறி இருக்கிறது’ – ஆர்.ஜே.டியின் தலைவருக்கு உ.பி அமைச்சர் பதில்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்