ஊடகங்களின் பெரும்பகுதியினர் அரசாங்கம், ”இந்து ராஷ்ட்ரிய சித்தாந்தம்” ஆகியவற்றின் பிரச்சார ஆயுதமாக செயல்படுகின்றனர் என தி இந்து வெளியீட்டு குழுமத்தின் இயக்குனரான என். ராம் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 23 ஆம் தேதி, புனித ஸ்டீபன் கல்லூரியின் ஊடக பிரிவு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ஊடகங்களின் பங்கு குறித்த குழு விவாதத்தில் பங்கேற்ற என்.ராம், பிரச்சாரம் மற்றும் ஊடகங்களின் சில பிரிவுகளில் காணப்படும் போலி செய்திகள் குறித்த தனது கவலைகளைப் பகிர்ந்துள்ளார்.
“ஊடகங்கள் தங்கள் வேலையை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவர்கள் பல இடங்களில் மோசமான காரியங்களைச் செய்து வருகின்றனர்” என என்.ராம் கூறியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு மார்ச மாதத்திற்குப் பிறகு, புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான செய்திகள், தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தொடர்பான செய்திகள், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வகுப்புவாத தாக்குதல் போன்ற நிகழ்வுகளில், ஊடகங்களின் பெரும்பகுதி, அரசாங்கம் மற்றும் இந்து ராஷ்ட்ரிய சித்தாந்ததின் பிரச்சார ஆயுதமாக செயல்பட்டன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக குழு விவாதத்தில் பேசிய, தி இந்தியா ஃபோரம் வார இதழின் நிறுவனரும், முன்னாள் ஆசிரியருமான ராம்மனோகர் ரெட்டி, “போலி செய்திகள் அதிகமாக இருக்கும் காரணத்தால், செய்திகளைச் சரிபார்ப்பது ஊடகங்களின் வேலை என்றும், ஆனால் சமீபத்திய காலங்களில் அவர்கள் இதைச் செய்வதில்லை” எனக் கூறியுள்ளார்.
பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் (Editor’s Guild) தலைவரும், தி சிட்டிசன் இதழின் ஆசிரியருமான சீமா முஸ்தபா, ”பத்திரிக்கைகள் முந்தைய கொள்கைகளுக்கு, திரும்பச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது” என கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.