Aran Sei

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

க்கிம்பூர் கெரி வன்முறை சம்பவ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை தர மறுத்ததால், மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ள நிலையில், அச்சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

மேலும், நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கிய பிணையை ஏப்ரல் 18ஆம் தேதி ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஒரு வாரத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 24) லக்கிம்பூர் நீதிமன்றத்தில் அஷிஷ் மிஸ்ரா சரணடைந்துள்ளார்.

லக்கிம்பூர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் – பிணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

“நீதிமன்றத்தின் உத்தரவைக் கேட்ட பிறகு, நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியே இருக்கிறது, சமூக விரோதிகளின் ஆட்சி அல்ல என உணர்ந்தேன். இந்த தீர்ப்பின் வழியாக கடவுளின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது” என்று மொஹர்னியாவைச் சேர்ந்த உயிரிழந்த விவசாயி குர்விந்தர் சிங்கின் தந்தை சுக்விந்தர் சிங் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரின் மகனை விடுவித்து, அவரை சுதந்திரமாக நடமாடவிட்டது விவசாயிகளின் முகத்தில் அறைந்தது போல இருந்தது. சர்வாதிகார ஆட்சியில், நாட்டில் இன்னும் சட்டம் உள்ளது என்ற உணர்வை உச்ச நீதிமன்றம் எங்களுக்கு அளித்துள்ளது. இந்த முடிவால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று சுக்விந்தரின் மூத்த சகோதரர் சுக்தேவ் சிங் கூறியுள்ளார்.

Source: PTI

“அண்ணாமலை நேரடியா கமலாலயம் வரேன்”

 

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்