Aran Sei

லக்கிம்பூர் கெரி வழக்கு: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை விசாரிப்பதில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்

க்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை விசாரிப்பதில் இருந்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு நீதிபதி ராஜீவ் சிங் விலகியுள்ளார். மனுவை விசாரிக்க புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்ட பிறகு இந்த வழக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் அக்டோபர் 3 ஆம் தேதி விவசாய சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது  ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையை முடக்கியுள்ளனர்.

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஒன்றிய அமைச்சர் மகனுக்குப் பிணை மறுத்த உச்ச நீதிமன்றம் – நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து

அப்போது, அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான ஒரு கார் உட்பட மூன்று கார்கள், போராடிய விவசாயிகள்மீது மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அதைத்தொடந்து, நடந்த வன்முறையில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலுக்குக் காரணமான ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரது மகன் அஷீஷ் மிஸ்ரா மீது கொலை முயற்சி வழக்குத் பதிய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் விளைவாக ஆஷீஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 கைது செய்யப்பட்டார். 3 பாஜகவினர் இறந்தது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த சுமித் ஜெய்ஸ்வால் அளித்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்கிம்பூர் கெரி வன்முறை: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணைக்கு எதிரான மனு – விசாரணைக்கு ஒப்புக்கொண்ட உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மிஸ்ரா ஏப்ரல் 24 அன்று சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டார். அதன்படி, ஜாமீன் மனு உயர் நீதிமன்ற லக்னோ அமர்வு முன் பட்டியலிடப்பட்டது. முன்னதாக ஆஷிஷின் மனுவை அனுமதித்த நீதிபதி ராஜீவ் சிங் தற்போது விசாரணையில் இருந்து விலகியதால் புதிய நீதிபதி நியமித்தப் பிறகுதான் விசாரிக்க முடியும். ஆசிஷின் கோப்பை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Source: newindianexpress

தமிழக அரசு Maridhas ஐ கூப்பிட்டு விசாரிக்கணும்

லக்கிம்பூர் கெரி வழக்கு: ஆஷிஷ் மிஸ்ராவின் பிணை மனுவை விசாரிப்பதில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்