Aran Sei

கும்பகோணம்: புதுமண தம்பதிகளை ஆணவக் கொலை செய்த உறவினர்கள் – காவல்துறை வழக்குப்பதிவு

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதல் திருமணம் முடித்த ஐந்து நாட்களில் இளம் தம்பதி, கொடூரமாக  படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்வேலியை சேர்ந்தவர்கள் சேகர் மற்றும் தேன்மொழி தம்பதி (பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்). இவர்களுக்கு சக்திவேல், சதீஷ் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மகன்களும், சரண்யா (23) என்ற மகளும் உள்ளார். தந்தை சேகர், மூத்த மகன் சக்திவேல் ஆகியோர் கொத்தனார் பணி செய்கின்றனர். மற்ற இரு மகன்கள் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

உ.பி: சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

ஒரே மகளான சரண்யா நர்சிங் படித்து விட்டு சென்னையில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே, சரண்யாவின் தாயார் தேன்மொழி உடல் நல குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் திருவண்ணாமலை மாவட்டம் பொன்னூர் சின்னத்தெருவை சேர்ந்த (பிற்படுத்தபட்ட வகுப்பு) மோகன் (26) என்பவரின் தாயாரும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.

நபிகள் நாயகத்தை அவமதித்த விவகாரம்: கடந்த ஓராண்டில் பாஜக தலைவர்கள் பேசிய இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களின் விரிவான பட்டியல்

அந்த நேரத்தில் சரண்யாவுக்கும் மோகனுக்கும் காதல் அரும்பியுள்ளது. இருவரது தாயாரும் சிகிச்சை முடிந்து அவரவர் வீடு திரும்பிய போதும், காதலர்கள் இருவர் மட்டும் அலைபேசி வழியாக காதல் தொடர்புகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் சரண்யாவும், மோகனும் சென்னையில் காதல் திருமணம் செய்துள்ளனர்.

சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யா வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் நண்பகல் உணவிற்கு பிறகு, மீண்டும் சென்னை செல்ல இருந்தனர். அப்போது சரண்யாவின் அண்ணன் சக்திவேல், சக்திவேலின் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும், காதல் தம்பதி வீட்டிற்கு வெளியே வந்தபோது, வீட்டின் கதவை வெளிப்பக்கமாக தாழிட்டுள்ளனர்.

பிறகு, அரிவாளால் மோகனை வெட்ட முற்பட்டனர். அப்போது, மோகன் அங்கிருந்து ஓடியபோது, அவரை சக்திவேல், ரஞ்சித் கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

சட்டம் தூங்கும்போது ‘புல்டோசர் கலாச்சாரம்’ செழித்து வளர்கிறது: கபில் சிபல் எம்.பி

இதையடுத்து சரண்யாவும் தப்பியோட அவரையும் விரட்டிச் சென்று அந்த கும்பல் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் காவல்துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் துணை கண்காணிப்பாளர்கள் அசோகன், வெற்றிவேந்தன் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா, குடும்ப பிரச்சனை காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளது. படுகொலை குறித்து நேரடி சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

இந்த நிலையில், காதல் தம்பதியை படுகொலை செய்த சக்திவேல் மற்றும் ரஞ்சித் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: பிபிசி தமிழ்

Bulldozer- ஐ வெச்சே ஆட்சி நடத்தும் BJP | Yogi Adityanath | Nupur Sharma

கும்பகோணம்: புதுமண தம்பதிகளை ஆணவக் கொலை செய்த உறவினர்கள் – காவல்துறை வழக்குப்பதிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்