Aran Sei

கும்பகோணம்: காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவப் படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்துச் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார். இதையொட்டி கைது செய்யப்பட்ட குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் கடந்த 6-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, அம்பேத்கர் உருவப் படத்தில் காவி உடை அணிவித்து விபூதி பூசி, குங்குமம் வைத்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம்: டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு காவித் துண்டு அணிவிப்பு – விசிகவினர் போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கும்பகோணம் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தியை கைது செய்தனர்.

இந்த நிலையில் அம்பேத்கரை அவமதித்த சுவரொட்டி ஒட்டிய வழக்கில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கும்பகோணம் கிளைச்சிறையில் இருந்த அவர் திருச்சி மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

‘வாட்ச்’க்கு பில் இருக்கா இல்லையா? | ஆட்டுக்குட்டியை கலாய்த்த செந்தில் பாலாஜி | Aransei Roast | BJP

கும்பகோணம்: காவி உடையில் அம்பேத்கர் சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்