Aran Sei

கிருஷ்ணகிரி: கொடி கம்பத்தை சிதைத்ததற்கு சாதியப் பாகுபாடே காரணம் – தலித் பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அத்திப்பாடியில் தேசியக் கொடி நடுவதற்காக கட்டப்பட்ட கான்கிரீட் தளத்தில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பொறிக்கப்பட்டதால் கோப்பபட்ட ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த திமுகவினரும் பாமகவினரும் இணைந்து அக்கொடி கம்பத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த ஊராட்சியில் சாதி ஆதிக்கம் மற்றும் பெண் வெறுப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக பிரமுகரின் தூண்டுதலின் பேரில், கொடிக் கம்பத்துக்காக புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் தளம் பாமகவினரால் சேதப்படுத்தப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட தளம் காயாமல் ஈரமாக இருந்தது. அந்த கான்கிரீட் தளத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் பஞ்சாயத்து தலைவர் சுதா குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட ஒரு தகடு இருந்தது. அனைவரின் ஒப்புதலுக்குப் பிறகு கொடித்தளம் கட்டப்பட்டதாக தி இந்துவிடம்  ஊராட்சி மன்ற தலைவர் சுதா தெரிவித்துள்ளார்.

எனது தந்தையின் சுதந்திரத்தை உடைத்துவிட்டார்கள் – சுதந்திர தின விழாவில் பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் மகள் உருக்கமான உரை

“பழைய கம்பம் துருப்பிடித்துவிட்டது, சிறுவர்கள் கொடியைக் கட்டுவதற்காக ஏறுகிறார்கள். 75 வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டம் என்பதால், ஒரு புதிய கம்பம் [கான்கிரீட் அடித்தளத்துடன்] இருந்தால் நன்றாக இருக்கும் என்று உணர்ந்தேன். இந்த செயல்திட்டத்திற்கு  ஊர் கவுண்டர் (தேர்வு செய்யப்படாத பெயரளவிலான கிராமத் தலைவர்) மற்றும் பலர் ஒப்புக்கொண்டனர், சனிக்கிழமை கட்டுமானம் தொடங்கியது. அதே இரவில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி மற்றும் சில பாமக ஆட்கள் கான்கிரீட் தளத்தை உடைப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது, ”என்று சுதா கூறியுள்ளார்.

“இது எப்போதும் இணக்கமான பஞ்சாயத்து. இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் தலைவரின் பெயர் கான்கிரீட்டில் நிரந்தரமாக பொறிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​​”ஏற்கனவே பழைய பீடம் இருந்ததால் புதிய பீடம் தேவையற்றது என்பதால் ஆட்சேபனை தெரிவித்தோம் என்று தி.மு.க.வின் உள்ளூர் செயலாளரான மூர்த்தியை கூறியுள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு இலவசக் கல்வியும் சுகாதாரமும் முக்கியம் – மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

இந்த பஞ்சாயத்தின் முதல் பட்டியலின பெண் தலைவரான இவர். சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்து திமுக தலைமையிலான அரசு பேசுகிறது. அதைக் கருத்தில் கொண்டு நீங்க இப்படி செய்தால் கட்சியின் பெயர் என்னவாகும் என்று கேள்வி கேட்டோம். அதற்கு, இதை சாதி மேலாதிக்கம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

“தலித் பஞ்சாயத்துத் தலைவரின் பெயர் பொறிக்கப்பட்டதை அனுமதிக்கமுடியாது என்று கூறி திமுகவினர் பாமகவினருடன் சேர்ந்து பீடத்தை அழித்ததாக  ஊராட்சி மன்ற தலைவர் சுதாவின் கணவர் குமார் கூறியுள்ளார்.

பாமக  உடனான தோழமை குறித்து மூர்த்தியிடம் கேட்டதற்கு. “நான் அவர்களை நிறுத்தினேன். நாங்கள் வெவ்வேறு கட்சிகளில் இருக்கலாம் ஆனால் நாங்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். நாங்கள் அனைவரும் உறவினர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

பிரச்சினையைத் தொடர்ந்து  ஊத்தங்கரை துணைக் காவல் கண்காணிப்பாளர், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்க இரு குழுக்களிடையே அமைதிக் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

புதிய கொடி தளத்திற்கு சாதி – பாலின பாகுபாடு இருப்பதாக கூறப்படும் நிலையில், அமைதிக் குழு கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டியிடம் ‘தி இந்து’ கேட்டபோது, சாதிப் பாகுபாடு நோக்கமாக இருந்தால் சரிபார்த்து நடவடிக்கை எடுக்குமாறு எனது அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

தேசியக் கொடியேற்றுவதில் சாதி பாகுப்பாடு ஏற்படக்கூடாது என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்திருந்தார். இதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

Source: thehindu

மதவெறி அரசியலுக்கு சட்டரீதியான செருப்படி | ஸ்டாலின் சொன்னது சரிதான் | Tharasu Shyam | M K Stalin DMK

கிருஷ்ணகிரி: கொடி கம்பத்தை சிதைத்ததற்கு சாதியப் பாகுபாடே காரணம் – தலித் பஞ்சாயத்து தலைவர் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்