கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள உணவகத்தில் இரவு உணவருந்தியவர்களை கொரனோவை காரணமாகக் கூறி அப்பகுதியின் உதவி ஆய்வாளர் தாக்கியுள்ளார்.
காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ராஜா உணவகத்தில்
10.20 மணிவாக்கில் உணவகத்தை மூடச் சொல்லிய உதவி ஆய்வாளர் முத்து அங்குச் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களைக் கையிலிருந்த லத்தியால் தாக்கி விரட்டியுள்ளார்.
தமிழக ஆளுநர் உரை – ” அதிமுகவின் இரட்டை வேடம்; காவு கொடுக்கப்படும் மாநில உரிமைகள் “
இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அங்குச் சாப்பிட்டு கொண்டிருந்த ஒசூரைச்சேர்ந்த பெண் உட்பட 3 பேர் காயமடைந்தனர். மேலும், அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பொது மக்களைத் தாக்கிய உதவி ஆய்வாளர் முத்துவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
‘பொதுமக்கள் காவல் நிலையம் செல்லவே பயப்படுகின்றனர்’ – உயர் நீதிமன்ற மதுரை கிளை
இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்துள்ள உணவாக உரிமையாளர் மோகன்ராஜ், இரவு 11 மணிவரை உணவகங்களை நடத்தலாம் என்ற தமிழக அரசு ஆணையின் படி செயல்பட்ட உணவகத்தில் உணவருந்தியவர்களை உதவி ஆய்வாளர் முத்து கண் மூடித்தனமாகத் தாக்கியது சாத்தான் குளம் தந்தை மகன் இறப்பு சம்பவத்தைப் போல இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்,”உதவி ஆய்வாளரை இடமாற்றம் செய்தது போதாது என்றும் ,அவரை கைது செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாது ஆய்வாளர் லதா அவர்களின் சர்வதிகார போக்கால், கடை நடத்த முடியாத சூழல் நிலவுவதாகவும் , தினமும் கடை ஒன்றுக்கு 100 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் மாவட்ட ஆட்சியர் நாகராஜினிடம் கடை உரிமையாளர் புகாரளித்துள்ளார்.
‘அரக்கோணம் சாதியப் படுகொலை’ – நீதி விசாரணை கோரும் புதிய தமிழகம் கட்சி
உதவி ஆய்வாளர் உணவகத்தில் சாப்பிடுவர்களை மிரட்டி , அடித்து வெளியே அனுப்பும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.