Aran Sei

‘பீமா கோரேகான் வன்முறை’ – காவல்துறை இணை ஆணையரை ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு

2018ஆம் ஆண்டு ஜனவரியில் புனேவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சாட்சியங்களை பதிவு செய்ய பிப்ரவரி 25ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரி விஸ்வாஸ் பாட்டீலை நேரில் ஆஜராகுமாறு பீமா- கோரேகான் வன்முறையை விசாரிக்கும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தின் பீமா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோரேகான் கிராமத்தில் 1818-ம் ஆண்டு, மராத்திய பேஷ்வா படைக்கும், ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி படைக்கும் போர் நடைபெற்றது. இதில், கிழக்கிந்திய கம்பெனி படையில் இடம்பெற்றிருந்த 49 பட்டியல் இன மக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவாக அங்கு ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் எல்கர் பரிஷத் என்ற பெயரில் இறந்தவர்களுக்கு இந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நடைபெற்ற நிகழச்சியில், பல தன்னார்வ தொண்டு அமைப்புகள் பங்கேற்றன. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து புனே மாவட்டத்தில் வன்முறை நடந்தது.

பீமா கோரேகான் வழக்கில் புதிய திருப்பம் – கம்ப்யூட்டரை ‘ஹேக்’ செய்து தகவல்களை மாற்றியது அம்பலம்

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ஜே.என்.படேல் மற்றும் மகாராஷ்டிர முன்னாள் தலைமைச் செயலாளர் சுமித் முல்லிக் ஆகிய இருவர் கொண்ட விசாரணை ஆணையம் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

மும்பையில் காவல்துறை இணை ஆணையராக (சட்டம் & ஒழுங்கு) இருக்கும் விஸ்வாஸ் பாட்டீல், வன்முறை சம்பவங்கள் நடைபெறும்போது காவல்துறை கண்காணிப்பாளராக (கோலாப்பூர் ரேஞ்ச்) பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று(பிப்பிரவரி 4), விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் ஆஷிஷ் சத்புடே, ஆணையத்தின் முன் சாட்சியங்களை பதிவு செய்ய விஸ்வாஸ் பாட்டீலை நேரில் ஆஜராகக் கோரி ஒரு விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்டுள்ள ஆணையம், பிப்ரவரி 25ஆம் தேதி ஆஜராகுமாறு விஸ்வாஸ் பாட்டீலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், அப்போதைய புனே காவல்துறை ஆணையர் ரஷ்மி சுக்லா தனது சாட்சியத்தை ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

Source: PTI

‘பீமா கோரேகான் வன்முறை’ – காவல்துறை இணை ஆணையரை ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்