Aran Sei

பசுவதையில் ஈடுபட்ட 5 பேரை கொலை செய்துள்ளோம் – பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு

சு வதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள் என்று ராஜஸ்தான் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கியான் தேவ் அகுஜா பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

நாங்கள் இதுவரை 5 பேரை அடித்துக் கொலை செய்துள்ளோம். பசு வதையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லுங்கள். எந்த தயக்கமும் இன்றி சுதந்திரமாக கொலை செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன். அவர்களுக்கு பிணையும் விடுதலையும் பெற்று தருகிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஆதரவாளர்கள் இடையே கியான் தேவ் பேசியுள்ளார்

சமூகவலைத்தளங்களில் காணொளி வைரலானதைத் தொடர்ந்து இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை தூண்டும் நோக்கில் ஈடுபடுவதாக கியான் தேவ் மீது 153 ஏ பிரிவின் கீழ் ராஜஸ்தான் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

இது குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா கூறுகையில், பா.ஜ.க.வின் மத பயங்கரவாதம் மற்றும் மதவெறிக்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?, பா.ஜ.க.வின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது என்று அவர் கூறியுள்ளார்.

Advocate Rathnam exposes Kallakurichi Sakthi School Ravi kumar history & Background | Kiruthika Case

பசுவதையில் ஈடுபட்ட 5 பேரை கொலை செய்துள்ளோம் – பாஜக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்