Aran Sei

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

தத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்வதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜெய்ப்பூரில் கியானவாப்பி  மசூதி பிரச்சினை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கெலாட், “நாடு எங்கே செல்கிறது? மதத்தின் பெயரால் ஒன்றிய அரசு அரசியல் செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“மதத்தின் பெயரால் தாங்கள் தவறாக வழிநடத்தப்படுவதை பொது மக்கள் உணர வேண்டும். இது பொது நலனுக்கு சாதகமாக இல்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கியான்வாபி மசூதியும் சர்ச்சைக்கான பின்னணியும் – ஒரு விரிவான அலசல்

முன்னதாக, வாரணாசியை சேர்ந்த லஷ்மி தேவி, சீதா சாஹூ, மஞ்சு வியாஸ், ரேகா பதக், டெல்லிய சேர்ந்த ராக்சி சிங் ஆகிய  ஐந்து பெண்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கியானவாபி மசூதியின் வளாகத்தின் மேற்குப் பகுதியில் இருக்கிற ஒரு சுவற்றில் ஷிரிங்கர் கவுரி தேவி, விநாயகர், ஹனுமன் மற்றும் நந்தி உருவங்கள் இருப்பதாகவும் அதை தினமும் வழிபடுவதற்கு மசூதி நிர்வாகம் தடை ஏற்படுத்த கூடாது என்று உத்தரவிடக் கோரியிருந்தார்கள்.

மதுராவின் ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார் அவருக்கு உருவம் தேவையில்லை – கங்கனா ரணாவத்

இதைத் தொடர்ந்து மே 14, 15 ஆம் தேதிகளில் கியானவாபி மசூதிக்குள் கமிஷனர் வழக்கறிஞர்கள் குழு, காவல்துறையின் பலத்த பாதுகாப்போடு ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.  இந்த ஆய்வில் மசூதிக்கு கீழே இருந்த மூன்று அறைகள், மூன்று மாடங்கள் மற்றும் தொழுகைக்கு முன்னர் முகம், கை, கால்களைக் கழுவுகிற சிறிய தொட்டி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

உ.பி: ஷாஹி இத்கா மசூதியை இந்துத்துவத்தினர் உரிமை கோரிய மனு – விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்பு

மசூதி தொட்டிக்குள் சிவலிங்கம் இருந்ததாக வழக்கு தொடர்ந்த பெண்கள் சார்பாக ஆய்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர் சுபாஷ் சவுதரி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த தொட்டியை யாரும் பயன்படுத்தாத வகையில் அதற்குச் சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் மசூதியில் தடையின்றி பிரார்த்தனை செய்ய அனுமதித்துள்ளது.

Source: ndtv

கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar

கியானவாப்பி விவகாரம்: மதத்தின் பெயரால் அரசியல் செய்யும் ஒன்றிய அரசு – ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்