Aran Sei

‘காப்’ அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி – பாஜக தலைவருடன் பேச மறுத்த தலைவர்கள்

மேற்கு உத்திரபிரதேச பகுதியில், ‘காப்’ (சாதி அமைப்பு அல்லது பகுதிவாரியான இனக்குழு அமைப்பு) அமைப்பினரிடம் பேச முயன்ற பாஜகவின் திட்டம், தோல்வியில் முடிவடைந்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யனை சந்திக்க, ஷாம்லி மற்றும் முசாபர்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஜாவ்லா காப்பின் தலைவர் சச்சின் ஜாவ்லா மறுத்துவிட்டதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அவர் எங்களை அணுகினார், நாங்கள் பேச மறுத்துவிட்டோம்” எனக் கூறிய 34 வயதான சச்சின் ஜாவ்லா, ”அவர் எங்களுடம் பேச வேண்டும் என்றால் ஒன்று அவரின் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது திகாத் (பாரதிய கிசான் சங்க செயலாளர், நரேஷ் திகாய்த்) அவர்களிடம் பேசி, காப்களின் பஞ்சாயத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். எங்களுடன் புகைப்படம் எடுத்து, குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டப்பூர்வ உத்திரவாத கோரிக்கைகளில், காப்களிடம் ஒற்றுமை இல்லை எனக் காட்ட முயன்றது போலத் தோன்றுகிறது” எனக் கூறியதாக தி இந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, காப் தலைவர்களைச் சந்தித்து அவர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க வந்திருப்பதாக, தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பல்வான், ”இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசிடம் பல வழிகள் இருக்கிறது. ஆனால் நாங்கள் பேச்சுவார்த்தையை நம்புகிறோம்” என கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா – ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?

கடந்த வாரம் முசாபர்நகர் பஞ்சாயத்தில் பேசிய நரேஷ் திகாய்த், பாஜக தலைவர்களைத் திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும், அப்படி அழைத்தால் அவர்கள் 200 பேருக்கு உணவளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பாஜக தலைவர்களைச் சந்திக்க விருப்பம் இல்லை எனக் கூறிய 84 கிராமங்களைச் சேர்ந்த ‘தேஷ் காப்’-யின் தலைவர் சுரேந்தர் சவுத்ரி, ”விவசாய சட்டங்களின் நன்மைகள்பற்றித் தெரிந்து கொள்ளும் அளவிற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல. அவர்கள் சம்யுக்த் கிசான் மோர்சாவிடம் (விவசாயிகள் போராட்டக் குழு) பேச வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் கோரிக்கைளை அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும். அது முடியவில்லை என்றால், அவர்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எங்களுடன் இணைந்து கொள்ளட்டும்” எனக் கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டிருந்தாலும் – சிறுமியின் குடும்பம் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை

பாஜகவை, ராமர் கோவில் விவகாரம் மற்றும் புல்வாமா தாக்குதலில் ஆதரித்தை ஒப்புகொண்ட சச்சின் ஜாவ்லா, “கட்சி, விவசாயிகளைக் கைவிட்டுவிட்டுவிட்டது. ஜாட் சமூகத்தினர் மட்டுமே காப் அமைப்பில் இருப்பதாக பாஜக நினைப்பதில் உண்மையில்லை. இங்கு அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் உள்ளது. பால்யனை சந்திக்க வேண்டாம் என அனைத்து சமூகங்களின் தலைவர்களிடமிருந்தும் காலையிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருக்கிறது” என தி இந்து -விடம் கூறியுள்ளார்.

 

‘காப்’ அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி – பாஜக தலைவருடன் பேச மறுத்த தலைவர்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்