Aran Sei

‘தேசத்துக்காக கதர்’ ஆனால் தேசியக் கொடிக்கு சீன பாலியஸ்டர் – பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

Credit : The Wire

மேட் இன் சைனா என்று இந்திய தேசியக் கொடியில் எழுதப்பட்டிருந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்டனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

இந்த காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் 100 சதவிகிதம் பாலியஸ்டர் என்ற வாசகத்திற்குக் கீழ், மேட் இன் சைனா என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய தேசியக் கொடியில் இருந்த ‘மேட் இன் சைனா’ டேக் – காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் சர்ச்சை

இந்தியாவின் தேசியக் கொடியை சீனாவில் வாங்கி பயன்படுத்துவதா? உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த maanila சபாநாயகர்கள், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டனர். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “தேசத்துக்காக கதர். ஆனால் தேசியக் கொடிக்கு சீன பாலியஸ்டர். வழக்கம் போல், பிரதமர் நரேந்திர மோடியின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் ஒருபோதும் சம்மந்தமில்லை என்று கிண்டல் செய்துள்ளார்.

Source : NDTV

பாஜகவை நக்கல் பண்றிங்களா? | சன் டிவி செய்தியாளரால் கடுப்பான H. Raja | Aransei Roast | BJP | suntv

‘தேசத்துக்காக கதர்’ ஆனால் தேசியக் கொடிக்கு சீன பாலியஸ்டர் – பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்