Aran Sei

கேரளா: பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரளாவில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இந்தநிலையில் ஆளுநரை திரும்ப பெற குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது, பல்கலைக்கழக நியமன விவகாரங்களில் தலையீடு போன்ற நடவடிக்கைகள் மாநில அரசுக்கு தலைவலியாக இருந்து வந்தது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், விளக்கம் கேட்டும் ஆளுநர் ஆரிப் முகமது கான் நேற்று முன்தினம் நோட்டீசு அனுப்பினார். ஆளுநரின் இந்த உத்தரவு கேரள அரசை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கிறிஸ்தவர்களைப் பாதுகாப்பது போல் நடிக்கும் பாஜக – கேரளா முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்

இந்தநிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன் பாலக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்பொழுது, “ஆளுநர் ஆரிப் முகமது கான், ஆளுநருக்கான பணிகளை விட்டுவிட்டு மற்ற அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் கற்பனை செய்து கொண்டு, ஒரு சர்வாதிகாரியைப் போல் நடந்து வருகிறார்.

அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது, கேரளாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் அவர் செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது. மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ். அமைப்பின் கைப்பாவையை போல் இயங்கி வருகிறார். தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ராஜஸ்ரீ நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட உத்தரவு. ஆனால், அந்த உத்தரவைப் பொதுவாக கருதி 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளதை என்னவென்று சொல்வது?.

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

ஆளுநர் கேரள அரசின் நிர்வாகத்துக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, தேவைப்பட்டால் அவரை ஆளுநர் பதவியிலிருந்து திரும்பப் பெறுமாறு குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவோம். அதேபோல் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

Source : india today

சங்கிகளின் கதறல் தீபாவளி | பெரியார் வெடியால் சிதறும் சங்கிகள் | Aransei Roast | BJP | Diwali2022

கேரளா: பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம் – முதலமைச்சர் பினராயி விஜயன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்