கேரளாவில் வாள்களுடன் பேரணியில் ஈடுபட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பினர் பொது இடத்தில் வாள் ஏந்தி பேரணி நடத்தியதாக பிணையில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதவெறியை தூண்டும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கேரளாவில் உள்ள கீழூரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அடையாளம் காணப்பட்ட 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, கையில் வாளோடு பேரணி சென்ற பெண்களின் காணொளி சமூக வலைதலைத்தில் வெளியானதையடுத்து ஆரியங்காவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துர்காவாஹினியின் தலைமையில் ஒரு வார கால ‘பதனா சிபிராம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு மட்டும் காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.
இந்த நிகழ்வு மே 15ம் தேதி தொடங்கி மே 22ம் தேதிவரை நடைபெற்றுள்ளது. வாள் ஏந்திய பெண்களை உள்ளடக்கிய பேரணி நடைபெற்றதால் பல அரசியல் அமைப்புகள் காவல்துறையினர் புகார் அளித்திருந்தன.
Source: keralakaumudi
Karthik Gopinath ஐ காட்டி கொடுத்ததே பாஜக தான் | Piyush Manush
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.