கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு மகப்பேறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் குழந்தையாகவோ, இரண்டாவது குழந்தையாகவோ இருக்கலாம். ஆனால் படிப்புக் காலத்தில் பேறுகால விடுமுறை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். மாணவிகளுக்கு கருக்கலைப்பு, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் 14 நாள்கள் விடுமுறை வழங்கப்படும் என பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
படிக்கும் மாணவிகள் சிலர் படிக்கும்போதே திருமணம் செய்து கொள்வதுண்டு. அவர்கள் படிப்பு முடிந்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். ஆனால் கோட்டையம் பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு அந்த சிக்கலை நீக்கும் விதமாக இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டம் படிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் 60 நாள்கள் பேறுகால விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்து இருக்கிறது.
இந்த விடுமுறையை படிப்பு காலத்தில் ஒருமுறை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதனை குழந்தை பெற்ற பிறகோ அல்லது குழந்தை பிறப்பதற்கு முன்போ எடுக்கலாம். முதல் குழந்தையாகவோ, இரண்டாவது குழந்தையாகவோ இருக்கலாம். ஆனால் படிப்புக் காலத்தில் பேறுகால விடுமுறை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அரவிந்த குமார் தலைமையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்தே இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
அதோடு மாணவிகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டாலோ, குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டாலோ அவர்களுக்கு 14 நாள்கள் விடுமுறை வழங்கப்படும். விடுமுறைக்காலத்தில் பருவதேர்வு வந்தால் அதனை அடுத்த பருவத்தில் எழுத அனுமதிக்கப்படும்.
அதே நேரம் பேறுகால விடுமுறை காலத்தில் இன்டர்னல் தேர்வு, வாய்மொழித்தேர்வு இருந்தால் அதனை சம்பந்தப்பட்ட துறையின் தலைவர்கள் மாணவிகளுக்கு வேறு தேதியில் நடத்திக்கொடுப்பார்கள் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேறுகால விடுமுறை எடுக்க மருத்துவர் சான்றிதழுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். விடுமுறை தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பே விண்ணப்பம் கொடுக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : NDTV
ராமர் பாலம் கட்டுக்கதையா? | சங்கிகளின் முதுகில் குத்திய பாஜக | Aransei Roast | BJP | Ram Setu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.