கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (CUSAT) மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மாதவிடாய் நாள்களில் மாணவிகள் விடுப்பு எடுக்க அனுமதித்த முதல் பல்கலைக்கழகம் என கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்துக்கு பாராட்டு குவிகிறது. இது குறித்து மாணவர் அமைப்பினர் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்ததாகவும், அதை பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதித்ததாகவும் மாணவிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இது பற்றி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் கூறுகையில், “பல்கலைக்கழகங்களில் தேர்வு எழுத வேண்டுமானால் 75% வருகை இருக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் மாணவிகள் அனுபவிக்கும் கஷ்டத்தை கருத்தில் கொண்டு அப்போது விடுப்பு எடுத்துக்கொள்ள வசதியாக 2% தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 73% வருகை இருந்தாலே மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இதன் மூலம் மாதவிடாய் நாள்களில் விடுப்பு கேட்டு கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை, அந்த விடுப்பு எங்களுக்கான உரிமையாகக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
Source : India today
Bjp Government gives approval to Tamilnadu Tableau | Republic Day Parade 2023 | Deva’s Update 88
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.