கேரளத்தில் ஏப்ரல் 29 அன்று நடைபெற்ற இந்து மகாசங்கத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.சி ஜார்ஜுக்கு கேரள உயர் நீதிமன்றம் இன்று (மே 27) ஜாமீன் வழங்கியது
இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக மே 1 அன்று பி.சி. ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். ஆனால் அன்றைய தினமே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் பி.சி ஜார்ஜ் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை திருவனந்தபுரத்தில் உள்ள கீழமை நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து பி.சி.ஜார்ஜ் நேற்று (மே 26) கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும் இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றச் சதி செய்யப்படுகிறது என்று பி.சி. ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் குடும்ப கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், இஸ்லாமியப் பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்குப் போட்டியாக இந்து, கிறிஸ்தவ பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய மத போதகர்கள் 3 முறை எச்சில் துப்பிய உணவு வகைகளே மற்ற மக்களுக்குப் பரிமாறப்படுகிறது. அவர்கள் துப்பிய உணவு வகைகளை நாம் ஏன் சாப்பிட வேண்டும். அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவை இந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்று பி.சி.ஜார்ஜ் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
Source : NDTV
Narendra Modi யை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Annamalai | Manoj Kumar Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.