Aran Sei

கேரளம்: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க முடிவு – மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை

ல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களை குறைக்கும் மசோதாவிற்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தனக்கு அதிகாரம் இருக்கும் வரை, எந்த சட்டத்தையும் விதிமுறைகளையும் மீற அனுமதிக்க மாட்டேன் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

மாநில பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள், அவரது செயல்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதால், அடுத்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும்.

கல்வியும் தனியார்மயமும்  – பேரா. A.P. அருண்கண்ணன்

துணைவேந்தர்கள் நியமனத்திற்கான தேடுதல் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இந்த மசோதா மூலம் மூன்றிலிருந்து 5 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

குஜராத்; பில்கிஸ் பானு வழக்கு: “நிகழ்ந்த கொடூரத்தை மறக்க முடியவில்லை” – பாதிக்கப்பட்டவரின் கணவர் யாகூப் ரசூல்

இந்நிலையில், இது குறித்து பேசிய கேரள ஆளுநர், மாநிலத்தில் உள்ள உயர்கல்வித் துறையின் நிலைமை மோசமாக இருப்பதால் கல்வித்துறை குறித்து அக்கறை கொண்டுள்ளேன். அதிகாரங்கள் என்னுடன் இருக்கும் வரை, நான் எந்த சட்டத்தையும் அல்லது விதிமுறைகளையும் மீற அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Source: hindustantimes

Bilkis Bano case Convicts released by Gujarat Bjp Government | Bilkis Bano Issue | Haseef | deva

கேரளம்: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்க முடிவு – மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்