Aran Sei

கேரளா: பள்ளி, கல்லூரிகளில் உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு பாடத்திட்டம் – கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்

கேரள பள்ளிகளில் ‘பாடி ஷேமிங்’ எனப்படும் உருவக்கேலி செயல்களுக்கு முடிவு கட்ட விழிப்புணர்வு பாடத்திட்டம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

பல முற்போக்கான நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது கேரள மாநிலம். தற்போது இதில் மேலும் ஒரு படி முன்னேறியுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். ஒருவரின் உடலமைப்பை வைத்தும், நிறம், பாலினத்தை வைத்தும் அவரை கேலி செய்வது பொதுச் சமூகத்திலும், திரைப்படங்களிலும் இயல்பான ஒன்றாக தற்போது வரை இருந்து வருகிறது.

உயிரிழந்த ராணுவ வீரரின் மகளை கேலி செய்யும் வலதுசாரிகள் – யோகி ஆதித்யனாத்தை விமர்சித்ததால் தாக்கு

இந்த பழக்கத்தால் பலர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான நோய்களுக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று மருத்துவ உலகம் கூறி வருகிறது. இதற்கு பள்ளி, கல்லூரிகளிலிருந்தே முற்றுப்புள்ளி வைக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது

இதுதொடர்பாக பேசிய கேரள பொது கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, “முகநூலில் நான் என்னுடைய படத்தை பகிர்ந்திருந்த போது ‘தொப்பையை’ குறைக்கச்சொல்லி சிலர் கூறியிருந்தனர். உடலமைப்பை வைத்து கேலி பேசும் ‘பாடி ஷேமிங்’ மிகவும் கேவலமான செயல் என்று அவருக்கு நான் விளக்கம் கூறியிருந்தேன்.

எனது நண்பனின் சகோதரனுடைய மகன் இதனால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவன் மீது நிற பாகுபாடுகள் காட்டப்பட்டன. இதனால் அவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதுடன், கடைசியில் பள்ளியை மாற்ற வேண்டியதாயிற்று. இதுபோன்ற கொடுமையால் பலர் உயிரை விட்ட சம்பவங்கள் கூட நடந்திருக்கின்றன.

“தெருமுனையில் பெண்களை கேலி செய்யும் விடலைகள்போல் பிரதமர் செயல்படுகிறார்” – மஹுவா மொய்த்ரா விமர்சனம்

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும், பாடத்திட்டத்தில் விழிப்புணர்வு கல்வியை பாடமாகச் சேர்ப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும்.

அதேபோல ஆசிரியர்கள் இதுபோன்ற சூழலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மனிதர்களை பொறுத்தளவில் அவர்களிடம் இருக்கும் செல்வமோ, அவர்களது நிறமோ பெரிய விஷயமல்ல. மாறாக அவர்களிடத்தில் இருக்கும் நற்பண்புகளைதான் நாம் பார்க்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Source : hindustantimes

Pesu Tamizha Pesu Rajavel Nagarajan Ignorant about History I Kamraj Social Justice Class | EWS

கேரளா: பள்ளி, கல்லூரிகளில் உருவக்கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்க விழிப்புணர்வு பாடத்திட்டம் – கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தகவல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்