Aran Sei

கேரளா: ஒன்றிய அரசின் ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பாஜக தலைவரின் மகன் நியமனம் – நேபோட்டிசம் என குற்றச்சாட்டு

ன்றிய அரசின் கீழ் உள்ள திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் அவர்களின் மகன் கே.எஸ்.ஹரிகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2021 டிசம்பரில் ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையம் தொழில்நுட்ப அதிகாரி பதவிக்கான விண்ணப்பங்களை வழங்கியது. இந்த பதவி பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்) பட்டப்படிப்பில் 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு மொத்தம் 48 வேட்பாளர்கள் செயல்முறைக்கு தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏப்ரல் 25, 2022 அன்று அவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர் : வழக்கு பதிந்த கேரள காவல்துறை

முதல் இரண்டு சுற்றுகளுக்குப் பிறகு, கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் அவர்களின் மகன் கே.எஸ்.ஹரிகிருஷ்ணன் மற்றும் மூன்று வேட்பாளர்கள் அடுத்த செய்முறைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், தொழிற்நுட்ப அதிகாரியாக ஹரிகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருடன் பங்கேற்ற சக போட்டியாளர்கள் இதனை நெபோட்டிசம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் தகுதியின் அடிப்படையில்தான் எனது மகனின் நியமனம் உள்ளது என்று கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

Source : india today

கேஸ் சிலிண்டரில் மோடி படம் | பாஜகவை அலற விடும் சந்திரசேகர் ராவ் | Aransei Roast | BJP | MODI | KSR

கேரளா: ஒன்றிய அரசின் ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக பாஜக தலைவரின் மகன் நியமனம் – நேபோட்டிசம் என குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்