Aran Sei

கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் நியமனம் – விதிமீறல் நிகழ்வதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிநியமனத்தில் விதி மீறல் செய்யப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ஒரு பணி நியமன அறிவிக்கை சென்னை ஐ.ஐ.டி & சி.எல்.ஆர். ஐ கேந்திரிய வித்யாலயாவால் 13/10/2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிற்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், யோகா ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஒப்பந்த ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவுள்ளது; அதற்கான “வாக் இன் இன்டர்வியூ” 20.10.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை 14.10.2021 அன்று அனுப்பி இருந்தேன். அதில் நான் எழுப்பியுள்ள கேள்விகள்.
இது நிரந்தர காலியிடங்களை நிரப்ப “கொல்லைப் புற வழியா?” மொத்த பணியிடங்கள் எவ்வளவு? காலியாக இருப்பவை எவ்வளவு? அவற்றை நிரப்ப நிரந்தர பணி நியமனங்களுக்கு என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது? ஏன் ஓராண்டு முன்பாகவே அடுத்த ஆண்டுக்கான தேவையை கணக்கில் கொண்டு பணி நியமனங்களை நடத்தக் கூடாது?
இந்த அறிவிப்பில் ஓ. பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்து எதுவுமே ஏன் ஒரு வரி கூட சொல்லப்படவில்லை? தற்காலிக நியமனங்களில் கூட இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்றெல்லாம் உள்ள அரசின் உத்தரவுகள் அமலாக வேண்டாமா? இட ஒதுக்கீடு பற்றிய தகவல்கள் ஒவ்வொரு பணி நியமன அறிவிக்கையில் வெளிப்படையாக தரப்பட வேண்டாமா?
இது போன்ற மீறல்கள் அனுமதிக்கப்பட கூடாது. உடனே ஒன்றிய அமைச்சர் தலையிட வேண்டும் என்று கோரி இருந்தேன்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களின் பரிசீலனைக்கு எனது கடிதம் முன் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலுவலகம் பதில் அனுப்பியுள்ளது. உரிய நடவடிக்கையை எதிர்பார்ப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியர் நியமனம் – விதிமீறல் நிகழ்வதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்