“திடீரென ஒரு கூட்டம் (இஸ்லாமியர்கள்) உங்களை தாக்கும் பொழுது காவல்துறை உங்களை காப்பாற்றாது. ஆகவே உங்களது வீடுகளில் பாட்டில்கள் மற்றும் அம்புகளை தற்காப்புக்காகச் சேகரித்து வையுங்கள். இது உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உன்னாவ் தொகுதி மக்களவை உறுப்பினரான சாக்ஷி மகராஜ், “இஸ்லாமியர்கள் ஆயுதங்களுடன் ஓடிவரும் புகைப்படத்தை பகிர்ந்து மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் பதிவின் இறுதியில் ஜெய் ஸ்ரீராம்” என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கூட்டம் (இஸ்லாமியர்கள்) உங்களை ஜிகாத் செய்துவிட்டுச் சென்ற பிறகுதான் இது பற்றி விசாரிக்கப் புலனாய்வுக் குழுவை காவல்துறையினர் அமைப்பார்கள் என்று சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
Source : newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.